பெற்றோர்களும்-மாணவிகளும் பார்க்க வேண்டிய சினிமா..
இது வரை எனது பிளாக்கில் சினிமா பற்றி எழுதியதில்லை..கல்வி சம்பந்தமான எனது அனுபவங்களை எழுதுகிறேன்.. ஒரு மாறுபட்ட முயற்சியாக வழக்கு எண் 18/9 - சினிமா பற்றி எழுதவேண்டியதாகி விட்டது..இது கல்வி பற்றி இல்லாமல் இருக்கலாம்..ஆனால் இன்று மாணவிகள் கல்வியை இழப்பதைத் தடுக்கக்கூடிய முறையில் ஒரு விழிப்புணர்வு படமாக நான் பார்ப்பதால் இதை எழுத வேண்டியதாகி விட்டது... காலம் மாறிக்கொண்டே வருகிறது...சினிமா என்பது மக்கள் மனதில் ஆழமாக ஊடுருவி, மனதில் மட்டுமல்ல உடல் ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. சுமார்.. 40/50 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கதாநாயகர்களின் காதலில் ஒரு முதிர்ச்சி இருந்தது..சுமார் 30 வயதிற்கு மேலானவர்கள், குடும்பத்தை நடத்திட ஒரு வேலையோ, தொழிலோ இருப்பவர்கள் தான் காதலிக்கவேண்டும் என்ற பிம்பத்தை அன்றைய சினிமாக்கள் நமக்கு ஏற்படுத்தியது..பின் ஜெயசங்கரும், ரவிச்சந்திரனும், கமல் ஹாசனும், ரஜினிகாந்த...