. ஜெய்வாபாய் பள்ளிக்கு நன்றி சொல்லும் நேரமிது. (A.ஈசுவரன் தலைவர், பெற்றோர்-ஆசிரியர் கழகம்..) அன்புடையீர் வணக்கம். 1937-ம் ஆண்டு திருமதி ஜெய்வாபாய் என்ற பெண்மணி(இறக்கும் தறுவாயில்) திருப்பூரில் பெண்களுக்கென்று பள்ளி வேண்டுமென்று விருப்பப்பட்டார். தனது மனைவியின் விருப்பத்தை கணவர் D.O.ஆஷர் 1942-ல் நிறைவேற்றினார். திருமதி ஜெய்வாபாயின் பெண் கல்விக்கனவு நிஜமாகியுள்ளது. இந்தியாவிலேயே 7200 மாணவிகள் படிக்கின்ற மாபெரும் மாநகராட்சிப் பெண்கள் பள்ளியாக பல்வேறு சாதனைகளைப்படைத்து ஜெயக்கொடி நாட்டி வருகிறது. 1989-ம் ஆண்டு எனது மகளை இப்பள்ளியில் 6-ம் வகுப்பில் சேர்த்தபோது பள்ளியின் நிலையென்ன? அன்று மாணவிகளின் எண்ணிக்கை 3008. பள்ளியின் சுற்றுச்சூழல் மிகவும் மாசுபட்டுக்கிடந்தது. அடிப்படை வசதிகளான குடி நீர், கழிப்பறைகள், கிணற்று நீர், வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள் போன்றவை...
Posts
Showing posts from February, 2014