மேதகு அப்துல்கலாமும் ஜெய்வாபாய் பள்ளியும்..
மேதகு அப்துல் கலாம் அவர்களும் ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளியும் (ஜெய்வாபாய்ஈசுவரன்) திருப்பூரில் உள்ள ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளிதான் இந்தியளவில் மிக அதிகமான அளவில் மாணவிகள் மட்டுமே படிக்கும் பள்ளியாகும். 2009-ம் ஆண்டு இந்தப்பள்ளியில் படித்த மாணவிகள் 7285 ஆகும். நான் இந்தப்பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தில் பொருளாளராக, செயலாளராக, தலைவராக 1989-ம் ஆண்டு முதல் 2009 –ம் ஆண்டுவரை சேவைசெய்துள்ளேன். இந்தப்பள்ளியானது மேதகு பாரத ரத்னா ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களுடன் 2001-ம் ஆண்டு முதல் தொடர்பில் இருந்துவந்துள்ளது. அது பற்றி எங்களது நினைவலைகள் உங்கள் பார்வைக்கு… தேசிய குழந்தைகள் அறிவியல் மா...