ஜெய்வாபாய் நகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளி 1989-ம் ஆண்டில்
1989-ம் ஆண்டு திருப்பூர் தொலைபேசி நிலையத்தில் பணிபுரிந்து வந்தேன்.. தொலைபேசி நிலையத்திற்கு எதிரில் தான் ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளி. இப்பள்ளியின் ஆண் ஆசிரியர்கள் இயற்கை உபாதை நீங்க தொலைபேசி நிலையம் வருவதை பார்த்துள்ளேன். தொலைபேசி நிலையத்தை ஒட்டியே ஹட்கோ காலனி. இந்தக்காலனியில் 1987-ம் ஆண்டு மத்தியரசு ஊழியர்கள் கோட்டா மூலம் இலாகவின் வீட்டுக்கடன் வாங்கியிருந்தேன். நான் ஒடக்காட்டில் வாடகை வீட்டில் பெற்றோருடன் கூட்டுக்குடும்பமாக இருந்ததால் இந்த வீட்டை வாடகைக ்கு விட்டிருந்தேன். 1989-ல் எனது பெரிய மகள் இந்துமதியை ஆறாம் வகுப்பில் இந்தப்பள்ளியில் சேர்த்தேன். இரண்டாவது மாடி அதுவும் ரோட்டைப்பார்த்து இருந்தததால் பள்ளிக்குள் நடப்பது நன்றாக தெரியும். பள்ளியின் சுற்றுச்சுவர் இரண்டடி உயரமே இருக்கும்.. சுற்றுச்சுவர் முன்பு வட நாட்டு ஜிப்சி நாடோடிகளும், நரிக்குறவர்களும் டெண்ட் அடித்து தங்கியிருப்பார்கள். காலை நேரங்களில், மாலை நேரங்களில் இவர்கள் எப்போது வேண்டுமானாலும் சுற்றுச்சுவரை தாண்டி பள்ளிக்குள் செல்வார்கள். தங்கள் காலைக்கடன்களை கழிப்பார்கள். இவர்கள் மட்டுமல்ல பக்கத...