ராணி ரூபாதேவியும் சுல்தானும்

ராணி ரூபா தேவி.. RANI RUPA DEVI STEP WELL AT AHEMADABAD, GUJARATH. ராணி ரூபா தேவி அல்லது ராணி ரூபாபாயின் பெயரில் அகமதாபாத்தில் இருந்து 17 கி.மீ தொலைவில் அடால்ஜ் என்ற கிராமத்தில் உள்ள ஸ்டெப் வெல்லிற்குத்தான் ராணி ரூபாதேவி என அழைக்கப்படும் ஐந்தடுக்கு கொண்ட பிரம்மாண்டமான கிணறு ஆகும். கிணறு என்றால் நம்ம ஊர்களில் இருக்குமே வட்டமாகவோ அல்லது செவ்வகவடிவத்திலோ சிறியதாக இருக்குமே அப்படியல்ல..! பொதுவாக குஜராத் ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் மழையளவு குறைவாக இருப்பதால் சுமார் ஐந்தாம் நூற்றாண்டு முதல் இப்பகுதிகளில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மழை நீரை முழுமையாக சேமிக்கவும், வழிப்போக்கர்களுக்கு தண்ணீர் தாகம் தீர்ப்பதற்காகவும் இப்பகுதியை ஆண்ட மன்னர்கள் 300 அடி நீளம் 50 அடி அகலத்திற்கும் நூறு அடி ஆழத்திற்கும் குறையாமல் பூமிக்கடியில் ஸ்டெப் வெல் என்பதை விட ஸ்டெப்பாண்ட்(குளம்) என்று கூறத்தக்க வகையில் பிரம்மாண்டமான அளவில...