கல்வித்தாஜ்மகாலுக்கு 70-ம் ஆண்டு விழா...


    கல்வித்தாஜ்மகாலுக்கு 70-ம் ஆண்டு விழா....






தனது கணவரிடம் பெண்களுக்கு பள்ளிக்கூடம் கட்டச்சொல்லி உயிர்விட்ட திருமதி ஜெய்வாபாய்.

தனது மனைவியின் இறுதி ஆசையை நிறைவேற்றிய திரு.டி.ஓ.ஆஷர்.
                                             முகலாய மன்னன் ஷாஜகான் தனது மனைவியின் நினைவாகக் கட்டியது தாஜ்மகால் என்ற கட்டடம்.   இது ஜடப்பொருள்களால கட்டப்பட்ட உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்று... திருப்பூரில் திரு.டி.ஓ.ஆஷர் என்ற ஒரு தொழிலதிபர் தனது மனைவி ஜெய்வாபாயின் இறுதி ஆசையை நிறைவேற்ற அவர் நினைவாக இப்பள்ளியைக் கட்டுகிறார்...ஒரு மகளிர் பள்ளிக்கூடம்...இன்று இந்தியளவில் மிக அதிகமாக 7000-ம் மாணவிகள் கல்வி கற்கும் ஒரே மாநகராட்சிப்பள்ளியாக, பெண்கல்விக்கு உதாரணமாக இப்பள்ளி விளங்குகிறது..எனவே இதனை நாவலாசிரியர் பொன்னீலன் அய்யா அவர்கள் கல்வித்தாஜ்மகால் என்றார்.


விழாவிற்கு வருபவர்களை வரவேற்கும் ஆசிரியைகள்...
மாண்புமிகு அம்மா அவர்களின் அன்பிற்கு பாத்திரமான கஜேந்திரர்களின் வரவேற்புடன் கூடிய விழா மேடை
ஜெய்வாபாய் பள்ளி மாணவிகளின் ஒரு பகுதி.
          ஜெய்வாபாய் மாநகராட்சிப்பெண்கள் மேல் நிலைப் பள்ளியின் 70 வது ஆண்டுவிழா 02-03-2012 அன்று பள்ளி வளாகத்தில் திருப்பூர் மாநகராட்சி சார்பாக 2010-ம் ஆண்டில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கலையரங்கத்தில் மாலை 4 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.
விருந்தினர்களை வரவேற்கும் பள்ளியின் வாத்தியக்குழு மாணவிகள்.... 
பெ.ஆ.கழக தலைவர் திரு.எஸ்.கார்த்திகேயன்.
விழா மேடையில் விருந்தினர்கள்..
          ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல் நிலைப் பள்ளியின் 70 வது ஆண்டுவிழா 02-03-2012 அன்று பள்ளி வளாகத்தில் திருப்பூர் மாநகராட்சி சார்பாக 2009-ம் ஆண்டில் மாண்புமிகு கலைஞர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, மாண்புமிகு முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 2010-ல் திறந்து வைக்கப்பட்ட பிரம்மாண்டமான கலையரங்கத்தில் மாலை 4 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.

திருமதி யாழினி ஆஷர் குத்து விளக்கேற்றுகிறார்.
          திருமதி ஜெய்வாபாய் ஆஷரின் பேரன் திரு.மோகன் பி ஆஷரும், அவருடைய மருமகள்..திருமதி.யாழினி ஆஷரும் கலந்து கொண்டனர். குத்து விளக்கை திருமதி யாழினி ஆஷர் ஏற்றி வைத்தார்.

 விழாவிற்கு பெற்றோர்-
ஆசிரியர் கழகத்தலைவர் திரு.எஸ்.கார்த்திகேயன் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமையாசிரியை திருமதி.அ.விஜயாஆனந்தம் அவர்கள் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். 
தலைமை ஆசிரியை அவர்கள் வரவேற்புரையாற்றுகிறார்.

ஆண்டறிக்கை வாசிக்கப்படுகிறது..
உதவித்தலைமையாசிரியர்(உயர் நிலை) திரு.எம்.ஜெயக்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். இந்தாண்டு சிறப்பு என்னவென்றால் திருப்பூர் நகரில் பிரபலமான  பள்ளியின் முன்னாள் மாணவிகள் டாக்டர் .பூம வீர மகாலட்சுமி, வழக்கறிஞர் திருமதி.சந்திரலேகா நம்பியார். தொழிலதிபர் திருமதி.ரேணுகா(ஈஸ்ட்மென் குரூப்) கலந்து கொண்டு வாழ்த்திப்பேசியதுதான்....
முன்னாள் மாணவி வழக்கறிஞர் திருமதி சந்திரலேகா பேசுகிறார்.
முன்னாள் மாணவி திருமதி.என்.ரேணுகா  பேசுகிறார்.
முன்னாள் மாணவி டாக்டர் பூம வீர மகாலட்சுமி பேசுகிறார்.
       திருப்பூர் மாநகராட்சியின் துணை மேயர் திரு.பி.குணசேகரன் அவர்கள் வாழ்த்திப்பேசினார். அவருடைய பேச்சில், மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் மழை நீர் சேகரிப்பிற்காக இப்பள்ளியைப் பாராட்டிப்பேசியதையும், மேண்மைமிகு அன்றைய பாரதக்குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல்கலாமிடம் இப்பள்ளி மாணவிகள் பரிசையும், பாராட்டையும் பெற்றதைப்பற்றி பேசிய போது ஏழாயிரம் மாணவிகளும் கை தட்டிய போது இப்புகழ் இப்பள்ளி மாணவிகளுக்குக்கிடைக்க வழிகாட்டியாக இருந்த எனது கண்கள் மகிழ்ச்சிக் கண்ணீரால் நிரம்பி ததும்பிவிட்டது..      


    இப்பள்ளியின் முன்னாள் மாணவியும்,  தற்போது சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் DRO/SPECIAL OFFICER  ஆக இருக்கக்கூடிய எஸ். மலர்விழி அவர்கள் கலந்து கொண்டு தன் கணீர்க்குரலால் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக நிஜ நிகழ்ச்சிகளை கதை போலக்கூறி சிறப்புரையாற்றினார்.
முன்னாள் மாணவி...இன்னாள் மாணவிகள் முன்னால்...
திருமதி.மலர்விழி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.
            கலை நிகழ்ச்சிகளைக்காண மாணவிகள் ஆர்வமாக இருந்ததால் சிகரங்களைத்தொடுவோம்என்ற தலைப்பில் இலக்கியச்சொற்பொழிவாற்றிய திரு இளசை சுந்தரம் அவர்களின் சிறப்பான இலக்கிய சொற்பொழிவை அவரால் முழுமையாக மாணவிகளுடன் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. இது அவருக்கு வருத்தமாக இருந்தாலும், இழப்பு என்னவோ மாணவிகளுக்குத்தான்..

டாக்டர் இளசை சுந்தரம் அவர்களின் இலக்கியச்சொற்பொழிவு.
         இறுதியாக மாணவிகளின் கலை நிகழ்ச்சி கைதட்டலுடன் ஆரம்பமாகியது..ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கைக்குட்டைகளை சுழற்றியும், தாளத்திற்கு ஏற்ப கைதட்டி ஆரவாரம் செய்து ரசித்தனர்.

          பள்ளியின் உதவித்தலைமையாசிரியர்(மேல் நிலை) திரு.என்.வாசுதேசன் அவர்கள் நன்றி கூறினார்.    


மாணவிகளுக்கு வழங்கப்பட வைக்கப்பட்ட வெற்றிக்கோப்பைகள்( நேரம்

இன்மையால் ஆண்டுவிழா மேடையில் வழங்கப்பட முடியாமல் போய்விட்டது..)
            
திருமதி.யாழினி ஆஷர் அவர்களை வரவேற்று தலைமையாசிரியை அவர்கள் பூங்கொத்து மற்றும் பொன்னாடை வழங்குகிறார்.

பள்ளியின் முன்னாள் மாணவி திருமதி.மலர்விழி அவர்களுக்கு ..

ஜெய்வாபாயின் பேரன் திரு.மோகன் பி ஆஷர் அவர்களுக்கு பூங்கொத்து...மற்றும் பொன்னாடை வழங்குகிறார் பள்ளித்தலைமையாசிரியை திருமதி.அ.விஜயாஆனந்தம்.



.விழாவில் பள்ளியின் ஆசிரியைகள்.....

விழாவில் பள்ளியின் ஆசிரியைகள்...மறுபகுதி

இலக்கிய மன்றப்பரிசை திருமதி.என்.ரேணுகா அவர்கள் வழங்குகிறார்..

திருமதி.எஸ்.மலர்விழி அவர்கள் பரிசு வழங்குகிறார்..

உதவி மேயர் திரு.குணசேகரன் அவர்களுடன் திரு.இளசை சுந்தரம் ...

மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி..
         ஜெய்வாபாய் பள்ளி போன்ற மாபெரும் பள்ளிகளில் விளையாட்டுவிழா, மற்றும் ஆண்டுவிழாக்களை ஒரே நாளில் காலையில் விளையாட்டுவிழா, மாலையில் ஆண்டுவிழா என நடத்துவதால் போதுமான நேரம் இன்மையால், மாணவிகளுக்கு வழங்கவேண்டிய பரிசுகளை மேடையில் வழங்க முடிவதில்லை..சிறப்பு பேச்சாளர் தனது உரையை சுருக்கிக்கொள்ள வேண்டியதாகி விடுகிறது..இதே போல கலை நிகழ்ச்சிகளையும் பாதி பாதி பாட்டுடன் முடிக்கும் நிலைமை ஏற்பட்டு விடுகிறது. எனவே ஒரு நாள் விளையாட்டு விழா, அடுத்த நாள் ஆண்டுவிழா என வைத்தால் முழுமை பெறும்..

           விழாவிற்கு வருகை தந்த விருந்தினர்கள் அனைவருக்கும் (ஆண்கள் உட்பட)தலைமையாசிரியை அவர்களே பூங்கொத்து மற்றும் பொன்னாடையை வழங்கச்சொல்லி, தொகுத்து வழங்கிய ஆசிரியர் திரு.கர்னல் கூறியதால் தலைமையாசிரியை அவர்களே அனைவருக்கும்  பூங்கொத்தும், பொன்னாடையும் வழங்கினார்.  இதற்குப்பதிலாக வர்ணணையாளர் ,தலைமையாசிரியையுடன், உதவித்தலைமையாசிரியை திருமதி.தெய்வாத்தாள், உதவி தலைமையாசிரியர்கள் திரு.என்.வாசுதேவன், திரு.ஜெயக்குமார், பெற்றோர்-ஆசிரியர் கழகத்தலைவர் திரு.கார்த்திகேயன் போன்றோர்களையும் அழைத்து பூங்கொத்தும், பொன்னாடையும் வழங்கச்செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. அவர்களும் உற்சாகமடைந்திருப்பார்கள்..விழாவை தொகுத்து மேடையில் வழங்கிய ஆசிரியர் திரு.கர்னல்  அவர்கள் ..தலைமையாசிரியை அவர்களுக்கே ..அத்தனை பேரையும் கெளரவிக்கும் பெருமையை அளித்துவிட்டார்..

          .மேலும் விழாவினைத் தொகுத்து வழங்க திரு.கர்னல் ஆசிரியரோடு, மேலும் இரண்டு, மூன்று பெண் ஆசிரியைகளையும் பள்ளி நிர்வாகம் பயன் படுத்தியிருந்தால், சிறப்பாக இருந்திருக்கும்..இதனால் அவர்கள் மட்டுமல்ல மேடையில் இருந்த விருந்தினர்கள்  , மாணவிகளும்  உற்சாகமடைந்திருப்பார்கள்..        

Comments

Post a Comment

Popular posts from this blog

கல்வித்தாஜ்மஹால்.. வரலாறு..

மொட்டு மலராகும்,மலர்ந்த பூ மீண்டும் மொட்டாகுமா? மொட்டாகும் அதிசயம்!!

அல்லிக்குளம் வைக்கலாம் வாருங்கள்!