Posts

அழும் குழந்தை சிரிக்கிறது...

Image
      திருப்பூரில் புதியதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள பெம் ஸ்கூல் ஆப் எக்ஸ்லென்ஸ் (PEM SCHOOL OF EZCELLENCE)பள்ளிக்கு 20-06-2011 அன்று காலை சென்றிருந்தேன். இப்பள்ளி CBSE திட்டத்தில் செயல்படுகிறது. நமது காலத்தில் எல்லாம் ( 25 வருடமுன்பு)ஐந்து வயது முடிந்தவுடன் தான் பள்ளியில் சேர்ப்பார்கள். அதுவும் வலது கையால் இடது காதைத்தொட வேண்டும்..ஆனால் இப்போது... மூன்று வயது முடிவதற்குள்ளேயே முதலில் PRE K.G.,அப்புறம்  L.K.G. பின் U.K.G, எனப்படித்து வந்தால் தான் ஒன்றாம் வகுப்பில் சேரவே முடியும்.. அம்மா மடியில் மழலை பேசி விளையாடும் குழந்தையை பள்ளியில் சேர்த்தவுடனேயே அழ ஆரம்ப்பித்து  விடுகி றது..தாயைப்பிரிகிற சூழல்   மட்டுமல்ல, தான் ஓடியாடி விளையாடிய பழகிய இடத்திற்குப்பதிலாக , பள்ளிச்சூழல் மாறுபட்டு இருப்பதால், பயந்து போய் அழ ஆரம்பித்துவிடுகிறது.  குழந்தைகளுக்கு பறவைகளை மிகவும் பிடிக்கும்.எனவே பள்ளியில் வண்ணப்பறவைகளை வைத்து பராமரிக்கவேண்டும்.   மழலையர் பள்ளிகளில் ஊஞ்சல், சறுக்கு போன்றவற்றை அமைப்பதன் மூலம் குழந்தைகளின் வீட்டு நினைப்பை மாற்றி ,பிற குழந்தைகளோடு...

சரசுவதிக்கு கோவில் கட்டுவோம்...

Image
               மலர்க்கொடிகளின் வேர்களுக்கு .. ..            திருப்பூரில் உள்ள அனுப்பர்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் ஒரு ஆக்கபூர்வமான அதிசயமான 32 புதிய வகுப்பறைகளுக்கான கிரஹப்பிரவேசம் 8-6-2011 அன்று நடைபெற்றது...அவர்களுடைய அழைப்பிதழில் யாருடைய பெயரும் முன்னிலைப்படுத்தப்படவில்லை....யார் அழைக்கிறார்கள் என்ற இடத்தில்,   மலர்க்கொடிகளின் வேர்களுக்கு   நீர் ஊற்றும் சேவகர்களாகவும்,   காத்து நிற்கும்     காவலர்களாகவும்...                தலைவர் மற்றும் உறுப்பினர்கள்  பள்ளி வளர்ச்சிக்குழு என்று மட்டுமே போட்டிருந்தார்கள்.. எனக்கும் அழைப்பிதழ் வந்தது …. காலை 6 மணிக்கு பள்ளிக்குப்போனேன்...அங்கு நான் கண்டது... கலையரசி படத்திலே எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு  பாட்டுப்பாடுவார்..அது அதிசியம் பார்த்தேன் மண்ணிலே...அது அப்படியே நிக்குது என் கண்ணிலே.. என்று வரும்..அது போலத்தான்...எனக்கும் பாடத்தோன்றியது... பள்ளியின் ப...

தமிழகத்தின் கல்வித்தொழிற்சாலைகள்....

Image
இ ன்றைய முதலீடு ரூபாய் 3 லட்சம் நாளைய(சேமிப்பு) லாபம் ரூ. 30 லட்சம். அன்பான பெற்றோர்களே! அதுவும் ஓரளவு நடுத்தர வருமானம் உள்ள தமிழக மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால்..உங்கள் மகனோ, மகளோ ஒரு மருத்துவராகவோ,ஒரு பொறியாளராகவோ மாறி லண்டன்,அமெரிக்கா சென்று  உங்கள் குடும்பத்தின் அந்தஸ்தை உயர்த்தி வளமாக வாழ நினைக்கிறீர்களா? அட என்னய்யா நீ....இப்படி கேட்கிறாய்? தந்தை மகற்காற்றும் கடமையே அது தானே..இதைத்திருவள்ளுவரே சொல்லியுள்ளாரே... நீ படித்ததில்லையா? என நீங்கள் கேட்கும் கேள்வி புரிகிறது? நாம் ஒவ்வொருவரும் குழந்தைகளை எதற்காக பள்ளிக்கு கல்வி கற்க அனுப்புகிறோம்? அறிவு பெறவா? வேலைக்காகவா? அட இது கூடவா தெரியாது.. நல்லா படித்து,பெரிய வேலைக்குப்போய்  நல்லா சம்பாதித்து நம்மைக்கொண்டுபோய் முதியோர் இல்லத்தில் விடாமல் நம்மைக்காப்பாற்றத்தான்..என ஒவ்வொருபெற்றோரும் நினைக்கிறோம்...அதற்காக வாயைக்கட்டி வயித்தைக்கட்டி பிள்ளைகளை நல்ல பள்ளியில் சேர்த்து...அட அதென்ன நல்ல பள்ளி என்கிறீர்களா? அதாங்க அம்மா அப்பாவை, மம்மி,டாடி என்று மூன்று வயதிலேயே சொல்லித்தருகின்ற, அப்பா அம்மா பட்...

முத்துச்சரம்: ஜனாதிபதி அப்துல்கலாமும்.. அன்பான ஏழைத்தாயும்..

முத்துச்சரம்: ஜனாதிபதி அப்துல்கலாமும்.. அன்பான ஏழைத்தாயும்..

அரசுப்பள்ளிகளும்-பராமரிப்பும்..

Image
அரசு/ நகராட்சிப்பள்ளிகளைப்பராமரிக்க சில ஆலோசனைகள்.... . .. அரசுப்பள்ளிகளும் பராமரிப்பும். . தமிழக அரசின் சார்பாக நடத்தப்படும் அரசு பொதுமருத்துவமனைகள்,அரசு போக்குவரத்து பேருந்துகள், அரசு, நகராட்சி,ஊராட்சிப்பள்ளிகள் போன்றவற்றிற்கு பொதுவான குறைபாடாக மக்களாலும்,ஊடகங்களாலும் சொல்லப்படுவது ஒன்றே ஒன்றுதான்! அது போதிய பராமரிப்பின்றி ,சுத்தமின்றி காணப்படுவதுதான். அரசுப்பள்ளிகள், நகராட்சிப்பள்ளிகள் கட்டப்படும்போது நன்றாகத்தான் இருக்கிறது.மாணவர்களின் வசதிக்காக வாங்கப்படும் இருக்கை வசதிகள்,அலமாரிகள்,கணிப்பொறிகள் போன்றவைகள் மட்டுமல்ல, வகுப்பறைக்கட்டங்கள் உட்படபோதியபராமரிப்பின்றியும்,முரட்டுத்தனமானகக்கையாளுவது போன்றவைகளால் விரைவில் சிதிலமடைந்து விடுகிறது.பெரும்பான்மையான பள்ளியின் தலைமையாசிரியர்களுக்கு தான் ஓய்வு பெறும்போது, எந்தவிதமான புகாரின்றி,தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட. தன்னால் வாங்கப்பட்ட அனைத்துப்பொருள்களையும் அடுத்து வரும் தலைமையாசிரியரிடம் ஒப்படைத்து பென்சனை பாதுகாத்துக்கொள்ளவே விரும்புகிறார்கள்..மாணவர்களின் கல்வி வளர்ச்சி...