Posts

Showing posts from 2012

அக்கிரமம்!.மாநகராட்சிப்பள்ளி இடத்தை ஆக்கிரமித்த ரோட்டரி கிளப்பினர்...

Image
கல்வித்தாஜ்மஹாலை ஆக்கிரமிப்பு செய்த திருப்பூர் ரோட்டரி கிளப்பினர்.. உலக அதிசியமான தாஜ்மஹால் பற்றி அனைவரும் அறிவோம். அதென்ன கல்வித்தாஜ்மஹால்.?.எனக்கேட்கிறீர்களா...திருப்பூரில் ஜெய்வாபாய்  நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்குத்தான் கல்வித்தாஜ்மஹால் என்ற புனைப்பெயர் உண்டு...திரு.டி.ஓ. ஆஷர் என்பவர் 1948-ம் ஆண்டு தனது மனைவியின் கடைசி வேண்டுகோளுக்கிணங்க முதன் முதலில் திருப்பூரில் ஒரு பெண்கள் பள்ளியைத்தொடங்கி அதை நகராட்சிக்குத்தானமாக வழங்குகிறார். ஒரு முறை இப்பள்ளிக்கு வருகை புரிந்த பிரபல  சாகத்தியவிருது பெற்ற  நாவலாசிரியர் பொன்னீலன் அவர்கள் இப்பள்ளியின் வரலாற்றைப்படித்துவிட்டு, 6000-த்திற்கும் மேற்பட்ட பெண்கள் கல்விகற்கும் இப்பள்ளிக்கு கல்வித்தாஜ்மஹால் எனப்பெயரிட்டழைத்தார்.                                         ஜெய் வாபாய் பள்ளி  வரலாறு..             திருப்பூரில் பஞ்சு வியாபாரத்தில் சி...

அரசுப்பள்ளிகளில் விலையில்லா மடிக்கணணிகள்....

Image
    திருப்பூர்   ஜெய்வாபாய் பள்ளியின் 1101-மாணவிகளுக்கு மடிக்கணணி....   திருப்பூர் ஜெய்வாபாய் மா நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 2011-12-ம் ஆண்டில் 12-ம் வகுப்பு பயின்ற 1100 மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணணி வழங்கும் விழா 21-7-2012 அன்று மதியம் 12  மணியளவில் நடைபெற்றது..விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர்  ஆர்.கஜலட்சுமி அவர்கள் தலைமை தாங்கினார்.  விழா புகைப்படக்காட்சிகள்...   மேடையில் வைக்கப்பட்ட விழா பற்றிய பேக் ட்ராப்.. கலையரங்கத்தில் அமர்ந்துள்ள 2011-12-ல் அ12-ம் வகுப்பு பயின்ற  ஜெய்வாபாய் பள்ளி மாணவிகளின் ஒரு பகுதி.   மாண்புமிகு தமிழக இந்து அற நிலையத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அவர்களை வரவேற்க காத்திருக்கும் பள்ளி பேண்ட் வாத்தியக்குழு மாணவிகள். மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு வி.ஐ.பி. சல்யூட் .  மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு முதமைக்கல்வி அலுவலர் நா.ஆனந்தி அவர்கள் கல்வித்துறையின் சார்பாக புத்தகம் வழங்கி வரவேற்கிறார் திருப்பூர் மா நகராட்சி துணை மேயர் திருச...

பெற்றோர்களும்-மாணவிகளும் பார்க்க வேண்டிய சினிமா..

Image
              இது வரை எனது பிளாக்கில் சினிமா பற்றி எழுதியதில்லை..கல்வி சம்பந்தமான எனது அனுபவங்களை எழுதுகிறேன்.. ஒரு மாறுபட்ட முயற்சியாக  வழக்கு எண் 18/9 - சினிமா பற்றி எழுதவேண்டியதாகி விட்டது..இது கல்வி பற்றி இல்லாமல் இருக்கலாம்..ஆனால் இன்று மாணவிகள் கல்வியை இழப்பதைத் தடுக்கக்கூடிய முறையில் ஒரு விழிப்புணர்வு படமாக நான் பார்ப்பதால் இதை எழுத வேண்டியதாகி விட்டது...                 காலம் மாறிக்கொண்டே வருகிறது...சினிமா என்பது மக்கள் மனதில் ஆழமாக ஊடுருவி, மனதில் மட்டுமல்ல உடல் ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. சுமார்.. 40/50 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கதாநாயகர்களின் காதலில் ஒரு முதிர்ச்சி இருந்தது..சுமார் 30 வயதிற்கு மேலானவர்கள், குடும்பத்தை நடத்திட ஒரு வேலையோ, தொழிலோ இருப்பவர்கள் தான் காதலிக்கவேண்டும் என்ற பிம்பத்தை  அன்றைய சினிமாக்கள் நமக்கு ஏற்படுத்தியது..பின் ஜெயசங்கரும், ரவிச்சந்திரனும், கமல் ஹாசனும், ரஜினிகாந்த...

கல்வித்தாஜ்மகாலுக்கு 70-ம் ஆண்டு விழா...

Image

நூறு சத தேர்ச்சியும்..மிதிபடும் மாணவர்களும்.....

Image
                             யாரைக்குறை கூறுவது?    தமிழக கல்விக்கூடங்களில் என்னதான் நடக்கிறது? மாணவர்களுக்கு என்னவாயிற்று?  சென்னையில் ஒரு தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவர் தனது ஆசிரியையே.. வகுப்பறையில் கத்தியால் குத்திக்கொள்கிறார்..உடுமலைப்பேட்டையிலோ ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியரின் அடிதாங்காத 11-ம் வகுப்பு மாணவர் 3 கடிதங்கள் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்கிறார்...அதே சென்னையில் ஒரு கல்லூரி மாணவர் தனது தோழியை நான்கு நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த செய்தியும் வருகிறது.. இச்செய்திகள் கல்வியாளர்களையும், சமூகவியலாளர்களையும் , ஆசிரியர்களையும், ,பெற்றோர்களையும் அதர்ச்சியடையச்செய்துள்ளது. .                  பூவைப்போல தூவப்படவேண்டிய கல்வி-இங்கு               ஆணியைப்போல அறையப்படுகிறது.. என்ற கவிஞர் வைரமுத்து அவர்களின் வைரவரிகள் நிஜம் என்பதை பறைசாற்றுகின்றன..  ...

கட்டாயஇலவசக்கல்விச்சட்டமும், பள்ளிமேலாண்மைக்குழுவும்..

Image
கட்டாய இலவச கல்வி சட்டம்..2009                        இந்திய அரசியல் சட்டம் 1950-ல் உருவாக்கப்பட்ட போது வழிகாட்டும் கொள்கையில், 1960 க்குள்  6 வய்து முதல் 14 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும்  கல்வி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது..உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் கல்வியை கட்டாய இலவச சட்டமாக இயற்றியிருந்தன..ஆனால் நாம் மட்டுமே  கல்வியை அடிப்படை  உரிமையாக்காமல் , வழிகாட்டும் கொள்கையில் எழுதி வைத்தோம்.., வழி காட்டும் கொள்கை என்பது கை காட்டி மரம் போல...போகும் வழியைக்காட்டுமே தவிர ..போகாது.                 கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும், இந்திய மாணவர் சங்கமும் ,ஆசிரிய இயக்கங்களும் கல்வியை  கட்டாயமாகவும், இலவசமாகவும்  தர வேண்டி  பல்வேறு இயக்கங்களை நடத்தினர்.   உச்ச நீதி மன்றமும்  கல்வியை அரசியல் சட்ட அடிப்படை உரிமையாக்க வேண்டும் என...