Posts

Image
படிக்காத மேதை கர்மவீரர் காமராஜருக்கு திருப்பூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் புகலாஞ்சலி! தமிழகத்தில் கல்விப்புரட்சிக்கு வித்திட்ட தமிழக முன்னாள் முதல்வர் பாரதரத்னா கர்மவீரர்,காலாகாந்தி,படிக்காத மேதை என்றழைக்கப்படுகிற காமராஜர் அவர்களின் பிறந்த நாளை தமிழகரசு கட ந்த மூன்று ஆண்டுகளாக ஜூலை 15 ம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக சிறப்பாகக் கொண்டாடி,மாற்றான் தோட்டத்து மல்லிகையின் அருமை,பெருமைகளை,வருங்கால மன்னர்களுக்கு எடுத்துக்கூறிவருகிறது. காமராஜர் ஆட்சி காலம்(1954-1963)பொற்காலம்,அதை மீண்டும் கொண்டுவருவோம் என்று மட்டும் கூறிக்கொண்டு,அவர் பயன்படுத்திய காரைக்கூட காப்பாற்றாமல்,பராமரிக்காமல் காயிலான் கடையில் கிடக்கும் கார் போல அவருடைய பெயர் தாங்கிய பிரம்மாண்டமான மாளிகையில் கேட்பாரற்று ( நன்றி: தினமணி 15-7-2010)கிடக்கின்ற செய்தியைப்படித்து வேதனையுற்ற உள்ளங்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் தமிழகமெங்கும் ஆயிரக்கணக்கான பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் காமராஜரின் சாதனைகளை அறியும் வண்ணம்,மாண்புமிகு தமிழக முத...

கல்வித் தாஜ்மஹால்.......

Image
இது கல்வித் தாஜ்மஹால்..... .. முகலாய மன்னன் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜ் மீது கொண்ட அன்பின் காரணமாக கட்டிய உலக அதிசியமான தாஜ்மஹால் பற்றித்தெரியும்!இது என்ன கல்வித்தாஜ்மஹால் ! எங்கே இருக்கிறது? என அறிய ஆவலாக உள்ளதா? திருப்பூரில் உள்ள ஜெய்வாபாய் மா நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு கல்வித்தாஜ்மகால் என்ற அடைமொழிப்பெயரை,1998-ல் பள்ளிக்கு வருகை புரிந்த பிரபல சாகித்திய அகதாமி விருது பெற்ற நாவலாசிரியர் பொன்னீலன் அவர்கள் இப்பள்ளியின் வரலாற்றைக்கேள்விப்பட்டு, கல்வித்தாஜ்மஹால் என்று வர்ணித்தார். இந்தியாவிலேயே ஒரு அரசு/ நகராட்சிப்பள்ளிகளில் ஒரே வளாகத்தில் மிக அதிகமான 7300 மாணவிகள் கல்வி கற்கும் பெண்கள் பள்ளி இதுவாகத்தான் இருக்கும்!...ஜெய்வாபாய் பள்ளியின் வரலாறு உங்கள் முன்னே!..                                                                      1951-ம் ஆண்டில் கல்வித்தாஜ்மஹால்.. .என்கி...

அந்தமான் செல்லுலர் ஜெயில்...

Image
அந்தமான் செல்லுலர் ஜெயிலின் தற்போதைய பருந்துப்பார்வை புகைப்படம். ஏழு பிரிவாக தாமரை இதழ் போலக் கட்டப்பட்ட ஜெயில் இரண்டாம் உலகப்போர் மற்றும் 1941-ன் பூகம்பம் காரணமாக சேதமடைந்தன. இந்திய அரசு இதை இடித்து அந்த செங்கற்களைக்கொண்டே ஜி.பி.பந்த் பெயரில் மருத்துவ மனையைக்கட்டியது. மீதியையும் இடித்திருப்பார்கள்! அதற்குள் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டு விடுதலை பெற்ற சுதந்திரப்போராட்ட வீரர்களின் வேண்டுகோளுக்கிணங்க தேசிய நினைவுச்சின்னமாக அறிவித்து, 1979 பிப்ரவரி மாதம் 11-ம் தேதி அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய் மக்கள் புனிதப்பயணம் மேற்கொள்ளத்திறந்து வைத்தார். சுதந்திரபோராட்டவீரர்கள் செல்லில் பயன் படுத்திய 1.உணவு. 2.குடி நீர்க்குவளை.3.இயற்கை உபாதை(மலம்,சிறு நீர்)பாத்திரம்.இதை அவர்களே சுத்தம்செய்து கொள்ளவேண்டும். தேங்காய் மட்டைவாங்கி,செக்கில் எண்ணெய் ஆட்டவேண்டும்,தேங்காய் மட்டையில் இருந்து கயிறு திரிக்கவேண்டும்.ஓய்வெடுத்தால் சாக்கிலான உடை மாட்டப்பட்டு, கீழே உள்ள படம்போல கழுத்து ,கை,இடுப்பு,கால்களில் விலங்கு மாட்டப்படும். முதல் இ ந்திய சுத ந்திரப்போரில் கைது செய்யப்பட்டவர்களை தூக்கில...

அந்தமான்...புண்ணிய பூமி!

Image
திருப்பூர் தொலைபேசி நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் எல்.டி.சியைப்பயன்படுத்தி மே 2 , 2010 முதல் மே 6 வரை வங்கககடலில் சென்னையில் இருந்து 1300 கி.மீ தொலைவில் உள்ள பூலோக சொர்க்கம் என அழைக்கப்படும் அ ந்தமான் தீவுகளுக்கு பயணம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. அ ந்தமான் தீவுகளின் அதியற்புதமான இயற்கைக்காட்சிகளும்,கடலுக்கடியில் வர்ணஜாலம் காட்டும் பவளப்பாறைகளும் பார்ப்பதற்கு,காணக் கண்கோடி வேண்டும் என்று கூறுகிறார்களே அது அ ந்தமானைப்பார்த்துத்தான் சொல்லியிருப்பார்களோ என்னவோ! நானும் அப்படித்தான் நினைத்தேன் மே 5-ல் செல்லுலர் ஜெயிலைப்பார்க்காத வரையில்! வியாபாரம் செய்யவ ந்த வெள்ளையர்கள் ,பிரித்தாளும் கொள்கையால் இ ந்திய மன்னர்களையும், இ ந்தியமக்களை யும் அடிமைப்படுத்தி ஆட்சிசெய்த போது பல்வேறு எதிர்ப்புகள் ஆங்காங்கே வ ந்தாலும் கணிசமான அளவில் பல மன்னர்கள் ஒன்றினைந்து 1857 -ல் போராடினார்கள். இப்போராட்டத்தை ஆங்கிலேயர்கள் சிப்பாய் கலகம் என்று கூறி கடுமையான முறையில் அடக்கினார்கள். இப்போராட்டத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய தளபதிகள் மற்றும் வீரர்களை இ ந்தியாவில் வைத்திரு ந்தால் தங்கள்...

ஜெய்வாபாய் பள்ளியில் நீர் மறுசுழற்சி!

Image
மாணவிகள் குடிநீர் குழாய்களை உபயோகப்படுத்துகின்றனர் ... வெளியாகும் கழிவு நீர் மறுசுழற்சி பாத்தியின் வழியாகச் செல்கிறது .. பாத்தியின் வழியாக கரி, கல்வாழை, மணல் ஆகியவைகளை கடந்து வரும் நீர், அமிலத்தன்மை நீக்கப்பட்டு தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. அப்படி சேகரிக்கப்பட்ட தண்ணீர் மின் மோட்டார் மூலம், தொட்டியில் ஏற்றப்பட்டு, சாலையோரப் பூங்காவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த முயற்சியில் ஈடுபட்ட மாணவிகளை பாராட்டி, மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர், முனைவர் க.பொன்முடி மாணவிகளுக்கு பாராட்டு பத்திரம் வழங்குகிறார். (2/03/2010).

நீர் நமது உயிர்! தண்ணீரை வீணாக்காதீர்!!

தாயைப்பழித்தாலும் தண்ணீரைப்பழிக்காதே ! என்பது நான் சிறுவயதில் கிராமத்தில் கேட்ட பழமொழி! தாயைவிட தண்ணீருக்கு ஏன் இந்த முக்கியத்துவம் என்று அன்று தெரியவில்லை! இன்று தெரிகிறது!! எனது பாட்டி ஆற்று நீரைக்குடித்தார்! எனது அம்மா கிணற்று நீரைக்குடித்தார்!! நான் குழாய் நீரைக்குடித்தேன்!!! எனது மகள் பாட்டில் நீரைக்குடிக்கிறாள்!!!! நாளை எனது பேரனும், பேத்தியும்...................? தமிழ் நாடு மூன்று பக்கமும் கடலால் மட்டுமல்ல,ஆந்திரா, கர்நாடகா கேரளா என்ற மாநிலங்களாலு சூழப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு தண்ணீரை வழங்கும் ஆறுகள் எல்லாம்(தாமிரபரணி தவிர) இந்த மாநிலங்களில் உற்பத்தியாவதால் தண்ணீருக்காக அவர்களிடம் அடிக்கடி சச்சரவு ஏற்பட்டு இந்தியன் என்ற உணர்வுகள் மறைந்து, இன உணர்வு ஏற்பட்டு விரும்பத்தகாத சண்டைகள் ஏற்படுவதைக்கண்ட போதுதான் கிராமத்தில் கேட்ட பழமொழியின் உண்மை புரிகிறது! தண்ணீரின் மகத்துவம் புரிகிறது! சமீபத்தில் பேருந்தில் திருச்சி செல்லும்போது தாகமாக இரு...

ஜெய்வாபாய் பள்ளியின் சுற்றுச்சூழல்

Image
1990-ம் ஆண்டில் பள்ளி வளாகத்திற்குள்( 7 1/2 ஏக்கர்) இருந்த மரங்கள் 49 மற்றும் சில காகிதப்பூச்செடிகள் மட்டுமே! 1992-ம் ஆண்டு பள்ளியின் பொன்விழாவின்போது பள்ளிவளாகத்திற்குள் மரம்/செடி/கொடிகள் வைப்பதைத் துவக்கிவைத்தோம்!2009-ம் ஆண்டு பள்ளிவளாகத்திற்குள் சுமார் ஆயிரம் மரம்,செடி,கொடிகள்,மூலிகைகளை வைத்து பெற்றோர்-ஆசிரியர் கழகம் பராமரித்து வருகிறது.இதனால் பள்ளிவளாகம் பூத்துக்குலுங்குகிறது.